(Poem) ஸ்கூட்டர்

0
10

(நிஷவ்ஸ்)

கூட்டுற துடைக்கரனு
கூட்டுக்குள் இருந்தவ
ஸ்-கூட்டற வாங்கிறா
இஷ்டத்துக்கு போறான்னு
மேட்டர பெரிதாக்கி
காட்டுறார் முகனூலில்.

ஆட்டோல தனியா
மாட்டுறதப் பார்க்க
ஓட்டுற ஸ்கூட்டர்
ஒழுக்கம் தரலாம்.

ஓட்டுற பொம்புளட
ஒட்டின உறவொன்றும்
ஸ்கூட்டர்ல வந்தா
இன்னும் நல்லம்.

ஸ்கூட்டர்ல பலபேர்
ஏறிப் போவதிலும்
ஆட்டோல போவது
ஏற்றம் உடையது.

மாற்றம் என்பது
தோற்றம் பெறுகையில்
போற்றலும் உண்டு
தூற்றலும் உண்டு.

LEAVE A REPLY