(Poem) நட்ட மரம் வெட்டோம்

0
9

(Mohamed Nizous)

நட்ட நடு முற்றத்தில்
நட்ட மரம் நெட்டை மரம்.
சிட்டுக்கள் பறவைகள்
வட்டமிட வளர்ந்த மரம்.
வெட்டி வீழ்த்திவிட்டு
வெட்ட வெளி வாசலிலே
வெட்டியாய் கல் பதிக்க
கொட்டிச் செலவழித்தார்.
சுட்ட வெய்யிலிலே
கட்டிடங்கள் சூடாக
பட்ட மரமுமின்றி
பட்ட கஷடங்களால்
நட்ட மரம் வெட்டியது
நட்டமென்று புரியவர
எட்டாத பசுமைக்கு
கொட்டாவி விடுகின்றார்.
எட்டுத் தலைமுறைக்கும்
விட்டு விட்டு போவதற்கும்
கெட்டுப்போன சூழலுக்கு
கட்டுப் பாடு போடுதற்கும்
திட்டங்கள் வகுப்போம்
சட்டங்கள் இயற்றுவோம்.
மட்டையும் மரமுமாய்
வெட்டியது போதும்
எட்டிய வரை மரத்தை
கட்டியே காப்போம்

LEAVE A REPLY