ஷாங்காய் விமான நிலையத்தில் தீ விபத்து: இருவர் பலி

0
131

201604290957120893_Two-killed-in-Shanghai-Hongqiao-airport-fire_SECVPFசீனாவில்  ஷாங்காய் நகரில் உள்ள ஹாங்கியாவ் விமான நிலைய கட்டிடத்தின் அடித்தளத்தில் பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி, இன்று காலை சுமார் 7 மணியளவில் வழக்கம்போல் பணியாளர்கள் அங்கு வேலைசெய்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் திடீரென்று புகையுடன் தீ வெளியானது.

மளமளவென விமான நிலைய கட்டிடத்தின் பிறபகுதிகளுக்கும் தீ பரவியது. உடனடியாக விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் வெகுநேரம் போராடி தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் சிக்கிய இருவர் உயிரிழந்ததாகவும், நான்குபேர் காயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY