கோறளைப்பற்று அபிவிருத்தி குழு கூட்டம்

0
183

(வாழைச்சேனை நிருபர்)

02‘பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கு அரசியல்வாதிகளுடன் இணைந்து அரசாங்க அதிகாரிகளும் உழைக்க வேண்டும். அப்போதுதான் குறித்தி பிரதேசம் அபிவிருத்தி அடையும்’ என கிராமிய பொருளாதார பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்று (28) மாலை பிரதேச அபிவிருத்தி குழு இணைத்தலைவர்கலான பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஎஸ்.அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் ஆகியோரது தலைமையில் இடம் பெற்ற போதே அவர் மேற்சொன்னவாறு தெரவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் நடைபெரும் போது அப்பிரதேசத்தில் உள்ள அனைத்து திணைக்களங்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் அவ்வாறு கலந்து கொள்ளாத திணைக்களங்களுக்கெதிராக அவர்களது திணைக்களத் தலைவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மாணம் எடுக்கப்பட்டது.

03

இங்கு கல்வி, சுகாதாரம், மீன்பிடி, சுற்றுலாத்துறை, தென்னை வளர்ப்பு, வீதி, குடி நீர் போன்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகளும் பெறப்பட்டன.

கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 2016ம் ஆண்டு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் 28 திட்டத்திற்கு நாட்பத்தைந்து லட்சத்தி தொன்நூற்ரைந்து ரூபாவும் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு பணிரெண்டு மில்லியன் ருபாவும் வெள்ள பாதிப்பு வீட்டுக்கு மூழுச்சேதம் 206 வீட்டுக்கு தலா ஒரு லட்சம் ரூபா வீதம் இருநூற்றி ஆறு லட்சம் ரூபாவும் பகுதி சேத்திற்கு ஐம்பதாயிரம் ரூபா வீதம் 85 வீட்டுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான ஞானமுத்து ஸ்ரீநேசன், எஸ்.வியாழேந்திரன், பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத்தலைவர்களும் கலந்து கொண்டனர்.

05

LEAVE A REPLY