தற்­கொலை அங்கி விவ­கா­ரத்­தி­லேயே ராம், நகுலன் உள்­ளிட்ட தள­ப­திகள் கைது: பாது­காப்பு செய­லாளர்

0
205

defence_secretaryசாவ­கச்­சேரி பகு­தியில் மீட்­கப்­பட்ட ஆயு­தங்கள் தொடர்­பான விவ­காரம் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­கா­கவே ராம் உள்­ளிட்ட விடு­தலைப்புலி உறுப்­பி­னர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர் என்று பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்டி ஆராச்சி தெரி­வித்தார்.

முன்னாள் தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் முக்­கி­யஸ்­தர்கள் திடீ­ரென தொடர்ச்­சி­யாக கைது செய்­யப்­பட்டு வரும் நிலை யில், அதற்­கான காரணம் தெளி­வற்ற நிலை யில் உள்­ளது. இந் நிலையில் தேசிய பாது­காப்பு விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­டைய கார­ணங்­க­ளுக்­கா­கவா முன்னாள் புலித் தலை­மை­கள் மீளவும் கைது செய்­யப்­ப­டு­கி­றார்கள் என பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்டி ஆராச்­சியை வின­வி­ய­ போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

‘உண்­மையில் அவர்­களின் கைது எனது விட­யப்­ப­ரப்­புக்கு அப்பாற்பட்­டது. அவர்­களை பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரே கைது செய்­துள்­ளனர். எனக்கு அறி­விக்­கப்­பட்­ட­மைக்கு அமையமுன்னாள் புலித் தலை­வர்­களின் கைது சாவ­கச்­சே­ரியில் மீட்­கப்­பட்ட தற்­கொலை அங்கி உள்­ளிட்ட வெடி பொருட்கள் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் விசா­ர­ணைக்கு அமை­வா­ன­தாகும்.

அது குறித்து பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­ன­ரி­டமே மேல­திக தக­வல்­களைக் கேட்க வேண்டும். என்று பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்டி ஆரச்சி குறிப்­பிட்டார்.

அப்­ப­டி­யாயின்இ கைது செய்­யப்­பட்­டுள்ள புலித் தலை­வர்­களால் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தலா? புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்­ட­வர்கள் கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு அதுவும் கார­ணமா? என வின­வி­ய­போது பதி­ல­ளித்த பாது­காப்பு செயலர் கரு­ணா­சே­ன­ஹெட்டி ஆரச்சி, அது குறித்து இப்­போ­தைக்கு என்னால் கருத்துக் கூற முடி­யாது என்று குறிப்­பிட்டார்.

பயங்­க­ர­வாத புல­ன­யவுப் பிரி­விவு அது குறித்து விசா­ரணை செய்­கி­றது. அவர்­களின் விசா­ர­ணையின் பின்னர் எமக்கு அளிக்­கப்­படும் அறிக்­கையின் பிர­கா­ரமே அது குறித்த முடி­வுக்கு எம்மால் வர முடியும். அப்­போதே புலிகள் மீள தலை தூக்க முயற்­சிக்­கின்­ற­னரா என்­பதை சரி­யாக கூற முடியும். அதனால் இப்­போ­தைக்கு அந்த கேள்­விக்கு விடை­ய­ளிப்­பது கடினம்’ என்றும் பாது­காப்பு செயலர் கூறினார்.

சாவ­கச்­சேரி மற­வன்­புலோ பகு­தியில் உள்ள வீடு ஒன்­றி­லி­ருந்து கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை ஒரு தற்­கொலை அங்கி, மூன்று கிளை­மோர்கள், 12 கிலோ சி- 4 வெடி­ம­ருந்து, 9மி.மீ. துப்­பாக்கி ரவைகள், கிளை­மோர்­களை வெடிக்க வைப்­ப­தற்­கான பற்­ற­ரிகள்- 2 மற்றும் சில தொலை­பேசி சிம் அட்­டைகள் என்­பன கைப்­பற்­றப்­பட்­டன.

இது தொடர்பில் பிர­தான சந்­தேக நப­ரான எட்வர்ட் ஜூலியஸ் எனப்­படும் முன்னாள் புலிகள் இயக்க உறுப்­பினர் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்ப்ட்டார். இதனைத் தொடர்ந்து அது குறித்து முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள ஆழ­மான விசா­ர­ணை­களில் இது வரை மொத்­த­மாக 12 பேர் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் புல­னாய்வுப் பிரி­வி­னரால் விசா­ர­ணைக்­காக கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

சந்­தேக நபர்­களின் தொலை­பேசி வலை­ய­மைப்பை வைத்து நடத்­திய விசா­ர­ணை­களில் அவர்கள் ஒரு வலை­ய­மைப்­பாக செயற்­பட்­டார்­களா என்ற சந்­தெகம் எழுந்­துள்ள நிலை­யி­லேயே ஆழ­மான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கி­றது.

அதன்­ப­டியே விடு­தலைப் புலிகள் அமைப்பில்,முன்னர் கிழக்கு மாகாணத் தள­ப­தி­களில் ஒரு­வ­ராக இருந்த ராம் எனப்படும் எதிர்மன்னசிங்கம் அரிச்சந்திரன், சார்ல்ஸ் அன்டனி படைப் பிரிவின் கட்டளைத் தளபதி கணபதிபிள்ளை சிவமூர்த்தி எனப்படும் நகுலன் மற்றும் திருமலைக்கு பொறுப்பாக இருந்த புலனாய்வுத் தளபதியான கலையன் எனப்படும் அறிவழகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

#Virakesari

LEAVE A REPLY