சட்டவிரோத வர்த்தகம்: மட்டக்களப்பில் 27 பேர்மீது வழக்குத்தாக்கல்

0
164

(விஷேட நிருபர்)

S3430009மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளுக்கு முத்திரையிடாமல் மற்றும் நிறை குறைத்த பொருட்களை விற்பனை செய்த 100 வர்த்தக நிலையங்கள் கடந்த மூன்று நாட்களில் சுற்றி வளைக்கப்பட்டன.

இவற்றுள் 27 வர்த்தகர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு நகரம், ஆரையம்பதி, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப் பிவுகளில் சுற்றிவளைப்புக்கள், சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மீன்வியாபார நிலையங்கள், மீன்வாடிகள், நகைக்கடைகள், பேக்கரிகள், சில்லறைக்கடைகள், பழக்கடைகள் போன்ற இடங்களில் இந்த சுற்றி வளைப்பு சோதனைகள் இடம்பெற்றன.

முத்திரையிடப்படாத தராசுகளை பாவித்தமை, நிறை குறைந்த பாண் விற்பனை செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் மற்றும் களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

S3430001 S3430002 S3430004 S3430005

LEAVE A REPLY