ஹஜ் முகவர்களாக செயற்பட 130 நிலையங்கள் விண்ணப்பம்

0
6

hajj10இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் முகவர் நிய­மனம் பெற்றுக் கொள்­வ­தற்­காக 130 முகவர் நிலை­யங்கள் முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு விண்­ணப்­பித்­துள்­ளன.முகவர் நிலை­யங்­களை தெரி­வு­செய்­வ­தற்­கான நேர்­மு­கப்­ப­ரீட்சை எதிர்­வரும் 2ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது.

உயர் நீதி­மன்றம் வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­மு­றை­களின் (Guide Lines) படியே நேர்­மு­கப்­ப­ரீட்சை நடாத்தி புள்­ளிகள் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் முகவர் நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக கடந்­த­கா­லங்­களில் முறைப்­பா­டுகள் ஏதும் கிடைத்­தி­ருப்பின் அது கவ­னத்­திற்­கொள்­ளப்­ப­டு­மெ­னவும் முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.எச்.எம்.சமீல் தெரி­வித்தார்.

மேலும் இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக இது­வரை 4400 விண்­ணப்­பங்கள் கிடைக்கப் பெற்­றுள்­ள­தா­கவும் ஹஜ் பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு 3000 விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு திணைக்­களம் கடி­தங்­களை அனுப்­பி­வைத்­துள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

கடிதம் கிடைக்­கப்­பெற்­ற­வர்கள் தமது பய­ணத்தை திணைக்­க­ளத்­திடம் உறுதி செய்­து­கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
திணைக்களம் ஹஜ் கடமைக்கான விண்ணப்பங்களை தொடர்ந்தும் ஏற்றுக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY