மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் மரணம்

0
107

(எம்.ரி.எம்.யூனுஸ்/ஏ.எச்.ஏ.ஹு ஸைன்)

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தைப் பிரதேசத்திலுள்ள மல்லிகைத்தீவு வீதியில் இன்று (28) வியாழக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆற்று மணல் ஏற்றிச் சென்று கொண்டிருந்த லொறியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரம், மோட்டார் சைக்கிள் மீது மோதிய லொறியின் சாரதி, தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார் எனவும் குறித்த விபத்து சம்பவம்தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

44be0c65-4537-4374-92bd-4b686e713b38

f8e635cb-3dad-41fb-8384-4a1e8559405d

LEAVE A REPLY