முதல் முறையாக இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் லேசர் சுவர்

0
120

201604281542167308_Laser-walls-activated-along-India-Pakistan-border-to-plug_SECVPFஎல்லைப் பகுதியின் ஆற்றுப்படுகைகளில் முடக்ம்பி வேலி அமைப்பது பெரிய அளவில் பலனை தராது. தண்ணீர ஓடும் காலங்களில் அப்பகுதியைக் கண்காணிக்க எல்லையையொட்டி ரோந்து செல்வதும் மிகவும் கடினம்.

எனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் லேசர் சுவர்கள் இப்பகுதிகளில் அமைக்க அரசு முடிவு செய்தது. இதன்படி ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் அமைந்துள்ள சில எல்லைப்பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு அகச்சிவப்பு மற்றும் லேசர் கற்றை சுவர்களை நிறுவும் பணிகளை எல்லை பாதுகாப்பு படை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் நிறுவப்பட்ட லேசர் சுவர்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. லேசர் சுவர்கள் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் செயல்படுபவை என்பதால், இவற்றின் மூலம் சர்வதேச எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை எளிதில் கண்காணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொழில்நிட்பம் மூடுபனி காலங்களிலும் வேலை செய்யும் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY