காத்தான்குடி பிரதேசத்தில் முஸ்லிம் பெண்கள் மோட்டார் சைக்கிள் ஓட ஆரம்பித்துள்ளனர்

0
325

(விசேட நிருபர் )

921d8e1f-3630-46c9-b955-9290750c96ecமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் முஸ்லிம் பெண்கள் மோட்டார் சைக்கிள் ஓட ஆரம்பித்துள்ளனர்.

இஸ்லாமிய பெண்களுக்கான தனித்துவமான உடையான ஹிஜாப் அணிந்து இவர்கள் மோட்டார் சைக்கிள் ஓடுகின்றனர்.

அன்றாடம் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு முச்சக்கர வண்டிகளில் அனுப்பும் செலவு இதன் மூலம் இல்லாமல் செய்வதுடன் தானே பிள்ளைகளை பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்வதாக இவ்வாறு காத்தான்குடியில் மோட்டார் சைக்கிள் ஓடும் பெண் சமூக சேவையாளரான திருமதி கே.எம்.யு.மஸாகீன் தெரிவித்தார்.

தனது கனவர் தனக்கு மோட்டார் சைக்கிள் ஓடுவதற்கு அனுமதி தந்துள்ளதுடன் பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு ஏற்றிச் செல்லல், சமூக சேவைகளுக்காக மற்றும் குடும்ப வேலைகள் நிமித்தம் போன்ற தேவைகளுக்காக மோட்டார் சைக்கிளை பயண்படுத்துவதாக அவர் குறிப்பிடுகின்றனார்.

தான் மோட்டார் சைக்கிள் ஓடுவதால் எந்தவொரு கலாசார ரீதியான பிரச்சினைகளும் ஏற்படவில்லையெனவும் முஸ்லிம் பெண்களுக்கான தனித்துவமான உடையான ஹிஜாப் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓடுவதாகவும் எத்தனையோ முஸ்லிம் பெண்கள் கார் ஓடுவதை பார்ப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் சம்மேளனத்தின் பொருளாளராக இருப்பதுடன் மற்றும் பெண்கள் கிராம அபிவருத்திச் சங்கம், சிவில் சமூக அமைப்பு போன்ற பல்வேறு சமூக சேவை அமைப்புக்களில் தான் அங்கம் வகிப்பதாகவும் தெரிவிக்கின்றார்.

மோட்டார் சைக்கிள் ஓடுவதற்கு தனது குடும்பத்தினைச் சேர்ந்த இருவர் மாத்திரமே எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர்களிருவரும் அச்சுறுத்தல் விடுத்தனர் எனினும் அவர்களிருவருக்கும் எதிராக தான் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மோட்டார் சைக்கிளில் வீதியால் செல்லும் போது ஆண்களினால் எந்த இடைஞ்சலுமில்லையெனவும் பெரிய சவால்கள் எதுவுமில்லையெனவும் மேலும் தெரிவிக்கின்றார்.

எனது பிள்ளைகளின் பாடசாலை மற்றும் பிரத்தியேக வகுப்புக்கான போக்கு வரத்துச் செலவுக்காக மாதமொன்றுக்கு 15000 ரூபா செலவாகின்றது. அந்த செலவு நான் மோட்டார் சைக்கிளில் எனது பிள்ளைகளை பாடசாலை மற்றும் பிரத்தியேக வகுப்புக்கு அழைத்துச் செல்வதால் மிகுதியாகின்றது எனவும் குறிப்பிடுகின்றார்.

தேவையில்லாமல் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிவது மற்றும் கடற்கரை போன்ற இடங்களுக்கு மோட்டார் சைக்கிளில் செல்வது போன்றவைகளில் இருந்து தவிர்ந்து கொண்டுள்ளேன் எனவும் மேலும் தெரிவிக்கின்றார்.

9d81ef2b-3c16-4bdd-b7a8-61c3c51d4103 42eebd6a-757d-4d50-ac39-35fe85b63df5 921d8e1f-3630-46c9-b955-9290750c96ec 973583de-daad-4b95-93fa-5495f39bfa5b

LEAVE A REPLY