கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள்

0
150

காத்தான்குடி கல்வி அபிவிருத்திக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதி ஒதுக்கீடுகாத்தான்குடி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் வேண்டுகோளின் பேரில்கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமத் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுத் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என். முபீன் தெரிவித்தார்.

அவ் வேலைத்திட்டங்களின் விபரம் வருமாறு:

பாடசாலை அபிவிருத்தி…..

காத்தான்குடி மெத்தப்பள்ளி மகா வித்தியாலயத்திற்கான இருமாடிக் கட்டிடங்களுக்கு ரூபாய் 55 இலட்சமும்,

காத்தான்குடி பாத்திமா பாளிகா மகா வித்தியாலயத்தின் இருமாடிக் கட்டிடங்களுக்கு 55 இலட்சமும்,

காத்தான்குடி அல் ஹிரா மகா வித்தியாலயத்தின் திருத்தப்பணிக்கு ரூபாய் 10 இலட்சமும் புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலயம், காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரின் வித்தியாலயத்தின் மலசலகூட வசிதிகளை மேம்படுத்த முறையே 5 இலட்சம், 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய்களும், பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தங்குமிட விடுதியமைப்பதற்கு 23 இலட்சம் ரூபாவும்,

காத்தான்குடி ஸாவியா வித்தியாலயத்திற்கு கட்டிடம் அமைப்பதற்கு 35 இலட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முபீன் மேலும் தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி…..
காத்தான்குடி வீதி அபிவிருத்திக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு..

காத்தான்குடி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமத் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுத் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என். முபீன் தெரிவித்தார்.

அவ் வேலைத்திட்டங்களின் விபரம் வருமாறு:

காத்தான்குடி 06 அமானுல்லாஹ் வீதி கொங்ரீட் இடலுக்கு ரூபாய் 20 இலட்சம்,

காத்தான்குடி உமர் ஷெரீப் பள்ளிவாயல் வீதி கொங்ரீட் இடல் 20 இலட்சம்,

காத்தான்குடி 04 சிறுவர் பூங்கா (ஆற்றங்கரை ஆயிஷா பள்ளி அருகாமையில் ) விரிவுபடுத்தல் ரூபாய் 10 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக முபீன் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY