அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கிழக்கு மாகாண இளைஞர்கள் சார்பில் ஸ்மார்ட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பு பாராட்டு

0
137

மட்டக்களப்பு கெம்பஸில் மருத்துவ பீடம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சிக்கு ஸ்மார்ட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பு பாராட்டுத் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு கெம்பஸில் மருத்துவ பீடம் அமைப்பதற்கு சவூதி அரேபியாவின் சர்வதேச இஸ்லாமிய அமைப்புடன் ஸ்ரீலங்கா ஹிரா பவுன்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அண்மையில் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இதன் மூலம் மட்டக்களப்பு கெம்பஸில் மருத்துவப் பீடம் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனால் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மாணவர்களது கல்வி வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பாக அது அமையவுள்ளது.

இராஜாங்க அமைச்சரின் இந்த முயற்சியைப் பாராட்டி “ஸ்மார்ட் ஒப் ஸ்ரீலங்கா” அமைப்பின் தலைவர் றிஸ்கான் முஹம்மட் இன்று அமைச்சின் காரியாலயத்தில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை சந்தித்து நினைவுச்சின்னம் ஒன்றினை வழங்கி பாராட்டினார்.

LEAVE A REPLY