இனி ஐபோனை ஒன்லைனில் அப்கிரேட் செய்யலாம்

0
155

imageஅப்பிள் நிறுவனமானது வருடந்தோறும் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துவருகின்றது.

இதனால் பயனர்கள் தமது பழைய கைப்பேசியிலிருந்து புதிய கைப்பேசிக்கு மாறிக்கொள்ளும் வசதி (iPhone Upgrade Program) அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த வருடம் iPhone 6S மற்றும் 6S Plus ஆகிய கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் போதே இவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் ஊடாக தவணைக் கட்டண முறை 24 மாதங்கள் வரை பணம் செலுத்தி புதிய ஐபோனை சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.

எனினும் இதனைப் பெறுவதற்கு பயர்கள் கண்டிப்பாக அப்பிள் ஸ்டோர் ஒன்றிற்கு விஜயம் செய்ய வேண்டிய தேவை இருந்தது. ஆனால் தற்போது ஒன்லைன் ஊடாக இவ் வசதியினைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

அது மட்டுமன்றி 12 மாதங்கள் வரை தவணைக் கட்டணத்தினை செலுத்திவிட்டு அதன் பின்னர் பழைய ஐபோனை வழங்கவும் முடியும். இவ் ஒன்லைன் வசதி தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் iPhone 7 அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் ஐக்கிய இராச்சியம் உள்பட ஏனைய நாடுகளிலும் இவ் வசதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY