மேற்கு இந்திய அணியின் தலைவர் டேரன் சமிக்கு பாகிஸ்தான் குடியுரிமை

0
148

imageவெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் டேரன் சமி அனைவருடனும் இனிமையாக பழகக்கூடியவர். வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும் சமியின் முகத்தில் இருந்து புன்னகை மட்டும் மாறாது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 20 ஓவர் உலககோப்பையை வென்று கொடுத்த டேரன் சமி, பாகிஸ்தான் உள்ளூர் அணியான பெஷாவர் ஜால்மி அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான வீரராக உள்ள சமிக்கு கவுரவக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று பெஷாவர் அணியின் உரிமையாளர் ஜாவேத் அப்ரிடி டுவிட்டர் மூலம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாண முதல்- அமைச்சர் பெர்வெய்ஸ் கட்டாக், டேரன் சமிக்கு கவுரவ குடியுரிமை வழங்குவதில் பெருமை கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY