கம்ப்யூட்டர் கேம் விளையாட்டுக்கு இடையூறு செய்த மகளை கொன்ற தந்தை

0
143

imageபுறநகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி மைக்கேல் சாண்ட்ஸ். இவருக்கு 5 வயது மகனும் எல்லீ சான்டர்ஸ் என்ற 2 வயது மகளும் இருந்தனர்.

அந்தோணி மைக்கேல் சாண்டர்ஸ் வீடியோ கேம் விளையாட்டில் மூழ்கி விட்டால் வெறித்தனமாகி விடுவார். அப்போது அவருக்கு யாராவது இடையூறு செய்தால் மிகவும் எரிச்சல் அடைவார்.

சம்பவத்தன்று அவரது மனைவி மார்க்கெட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் மகனும், மகள் எல்லீ மட்டுமே அந்தோணி சாண்டர்சனுடன் இருந்தனர். அந்தோணி சாண்டர்ஸ் தீவிரமாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது மகள் எல்லீ இடையில் குறுக்கிட்டு தொந்தரவு செய்து கொண்டே இருந்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தோணி சாண்டர்ஸ் எல்லீயை முரட்டு தனமாக மூச்சை திணறடிக்க வைத்து கொலை செய்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

LEAVE A REPLY