எல்ரீரீஈ திருகோணமலை மாவட்ட முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் கைது

0
205

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் கலையரசன் என்றழைக்கப்படும் அறிவழகன் செவ்வாய்க்கிழமை பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

திருகோணமலை அரசடிப் பகுதியில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அறிவழகன் கடந்த 2009ஆம் ஆண்டு அம்பாறை மாவட்ட எல்ரீரீஈ தளபதி ராம் என்பவருடன் திருகோணமலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் 2013 ஆம் ஆண்டு விடுதலையாகி வந்து உறவினருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவரை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்வதற்கு பயங்கரவாத பிரிவினர் முயன்றபோது அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் இதனைத் தொடர்ந்து, திருகோணமலை நகர் அரசடிப் பகுதியில்வைத்து செவ்வாய்க்கிழமை காலை கைது செய்து விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.

ஏற்கனவே, விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் ராம் அம்பாறையிலும் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சார்ள்ஸ் அன்டனி படையணியின் கட்டளையிடும் அதிகாரியான நகுலன் என்றழைக்கப்படும் சிவமூர்த்தி கணபதிபிள்ளை யாழ்ப்பாணத்திலும் இந்தவார முற்பகுதியில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அறிவழகனின் கைதும் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY