அல்-நஜீபாத் பெண்கள் கல்வி நிலையத்தில் 4 ஆண்டுகளை கொண்ட அல்-ஆலிமா கற்கை நெறி

0
167

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

8694499a-522a-4983-b33e-7374f66a8138இலங்கையின் மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தின் பேருவலை பிரதேசத்தில் இயங்கிவரும் அல்-நஜீபாத் பெண்கள் கல்வி நிலையத்தில் புதிதாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ள 4 ஆண்டுகளை கொண்ட அல்-ஆலிமா கற்கை நெறியுடன் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை,அல் ஆலிம் பரீட்சை,தர்மச்சாரிய பரீட்சை ,கனினி கற்கை நெறி,மணை அழங்காரம்,தையல் பயிற்சி உள்ளிட்ட புதிய கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

குறித்த கற்கை நெறிக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பதாரியின் முழுப் பெயர்,வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம்,2015ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றுப் பிரதி,பிறப்பு அத்தாட்சிப் பத்திர பிரதி உள்ளிட்ட ஆவணங்களை எதிர்வரும் 27-04-2016 திகதிக்கு முன்னர் இலக்கம் 06,ஸாவியா வீதி மஹகொட ,பேருவலை என்ற முவரிக்கு அல்லது alnajebath@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

இதற்கான தகைமைகளாக 2015ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான தகைமையை பெற்றிருத்தல் அவசியம்.

இக் கற்கை நெறிக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 01-05-2016 இலக்கம் 100. கீரன்தெடிய வீதி,பேருவலை என்ற முகவரியில் அமைந்துள்ள கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இக் கல்லூரி சனி முதல் வியாழன் வரை காலை 7.30 தொடக்கம் மாலை 5.00 மணி வரை நடைபெறும் எனவும் தங்குமிட வசதிகள் இல்லை எனவும் இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0773536072,0777877076 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்-நஜீபாத் பெண்கள் கல்வி நிலையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY