மொழித்துறை பேராசிரியராக தெரிவு செய்யப்பட்டுள்ள ரமீஸ் அப்துல்லாஹ்வுக்கு ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து

0
70

imagesபேராசிரியராக தெரிவு செய்யப்பட்டுள்ள தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ்வுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-

“பல கல்விமான்களையும், அரசியல்வாதிகளையும் உருவாக்கிய சம்மாந்துறை பிரதேசத்தில் முதல் பேராசிரியராக ரமீஸ் அப்துல்லாஹ் தெரிவு செய்யப்பட்டுள்ளமை சம்மாந்துறை மண்ணுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

தென் கிழக்குப் பல்கலைகழகத்தின் ஊடாக பல சிறந்த தலைவர்களை நம் சமூகம் பெற்றுக் கொண்டுள்ளது. அதில் ரமீஸ் அப்துல்லாஹ்வின் பங்களிப்பும் அளப்பரியது. பேராசிரியராக அவரது சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள”; – என்றார்.

LEAVE A REPLY