டுபாயில் திருட்டு: மூன்று இலங்கையர்களுக்கு சிறை

0
179

284502823Carடுபாயில் உள்ள வாகன விற்பனை நிலையம் ஒன்றில் 11 கார்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்துவிட்டு தப்பிச் சென்றிருந்த இலங்கை பணியாளர்கள் மூவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மூன்றாண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

குறித்த வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் வெளிநாடு சென்றிருந்த போது, 2.8 மில்லியன் டினார் பெறுமதியான 11 மோட்டார் கார்களை சட்டவிரோதமான முறையில் இவர்கள் விற்பனை செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மூவரையும் குற்றவாளிகளாக இணங்கண்ட அந்நாட்டு நீதிமன்றம் சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் 150,000 டினார் தண்டமும் விதித்துள்ளது.

இவர்களுடைய சிறைக் காலம் நிறைவு பெற்றதும் மூவரையும் நாடுகடத்துமாறு அந்நாட்டு நீதிமன்ற உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY