கிழக்கு முதலமைச்சரினால் ஏறாவூர் பெண் சந்தை அபிவிருத்திக்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

0
113

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது வசதிகள் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஏறாவூர் பெண் சந்தைக் கட்டிடத் தொகுதியை புனர் நிர்மாணம் செய்வதற்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் புதன்கிழமை தெரிவித்தார்.

இலங்கையில் முஸ்லிம் பெண்கள் பொருள் விற்பனையிலும் கொள்வனவிலும் ஈடுபடும் பெண்களுக்கான ஒரேயொரு சந்தையாக இது இருந்தபோதும் கடந்த தசாப்தங்களுக்கு மேலாக இந்த சந்தைக்கட்டிடம் உள்ளுராட்சி நிருவாகத்தினரால் திருத்தியமைக்கப்படவில்லை என்று அங்கு வியாபாரத்தில் ஈடுபடும் பெண்கள் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததை அடுத்து திருத்த வேலைக்கான நிதி முதலமைச்சரால் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பெண் சந்தைக் கட்டிட புனரமைப்புப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு முதலமைச்சரால் பணிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சரின் இணைப்பாளர் யூ.எல். முஹைதீன்பாவா தெரிவித்தார்.

4f6543dd-a54e-477c-b287-3a334303cfb5 6c569448-f6b2-4a93-bf67-6b460a6d9ab0 7ab9651d-89d4-4210-9ef1-8b804237dbc6 896b878d-e886-4235-8e89-f2126811069b a296251e-ac26-49e0-8730-fa8b5b2b6a0c e880bd96-f6ad-4c5e-852f-4213242eb4c3 fdd536c3-09b3-4314-a5c9-3b5c2ea29f02

LEAVE A REPLY