நச்சுக்களை பாதத்தின் மூலம் வெளியேற்றும் எளிய ஜப்பானிய முறை!

0
119

imageநம் உடலிலிருந்து நச்சுக்களும், கழிவுகளும் அன்றாடம் வெளியேற்றப்படுகின்றன. ஆனாலும் சில நச்சுக்களும் கழிவுகளும் உடலிலேயே தங்கி உடலுக்கு தீமை விளைவிக்கும். அவைகளை உணவு கட்டுப்பாடின்றி, பாதத்தின் மூலமாகவும் எளிதாக வெளியேற்றலாம்.

இது ஜப்பானின் பாரம்பரிய முறையாகும். இந்த முறை உடலுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத மிகவும் பாதுகாப்பான முறையாகும். ஃபுட் பேட் (Foot pad) மற்றும் ஃபுட் ஸ்பா (Foot spa) என்ற இரு முறைகள் உபயோகப்படுத்தபடுகின்றன. இரண்டுமே வீட்டில் உபயோகபடுத்தக் கூடிய முறைகள்தான். இது இயற்கையாக உடலில் உள்ள நச்சுக்களை போக்கி உடற்திறனை ஊக்குவிக்க உதவுகிறது.

பூட் பேட்(foot pad) உபயோகப்படுத்தும் முறை: ஃபுட் பேட்(foot pad) என்பது சிலவகையான மரங்கள் மற்றும் மூங்கில் சாற்றிலிருந்தும் தயாரிக்கப்பட்ட கலவை. அவை பெரிய ஸ்டோர்களில் கிடைக்கக் கூடியவை. அதனை இரவில் தூங்கும் முன், பத்து போன்று பாதத்தில் போட்டுவிட வேண்டும். காலையில் தூங்கி எழுந்ததும் அந்த பத்தினை அகற்றிவிட வேண்டும். அவைகள் நிறம் மாறியிருக்கும். அது நம் உடலிலிருந்து நச்சுக்கள் வெளியேறுவதை குறிக்கிறது. அவ்வாறு தொடர்ச்சியாக உபயோகிப்பதால் மயக்கம், உடல் சோர்வு, மூட்டு வலி, தலைவலி ஆகியவை குறைந்திருப்பதை கண்கூடாக உணரலாம்.

LEAVE A REPLY