காத்தான்குடி அல் ஹிரா பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்கு சிப்லி பாறூக் நிதி ஒதுக்கீடு

0
155

(எம்.ரி.எம்.யூனுஸ்)

மட்டக்களப்பு மத்திய கல்வி வலய காத்தான்குடி மட்/மம/அல்-ஹிரா வித்தியாலயத்தின் தேவைகளை கண்டறியும் நோக்குடன் கடந்த 18.04.2016ஆந் திகதி பாடசாலைக்கு திடீர் விஜயமொன்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  ஷிப்லி பாறூக் மேற்கொண்டார்.

பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களை சந்தித்து பாடசாலையின் அபிவிருத்தி, மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள், மற்றும் பல தேவைகளை கேட்டறிந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அவர்கள் அதற்கான சில உதவிகளை கிழக்கு மாகாண சபை மூலம் பெற்று தருவதாகவும் அரசின் 600 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்திற்குள் அல்-ஹிரா பாடாசாலையினை இணைத்துக்கொள்வதட்கு முழுமையாக முயற்சிப்பதாகவும் கூறினார்.

மேலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நசீர் அஹமட் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக கிழக்கு மாகாண சபை மூலம் ஒரு மில்லியன் ரூபா நிதி மிக நீண்ட காலமாக சேதமடைந்த நிலையில் காணப்படும் அல்-ஹிரா பாடசாலையின் கட்டிடங்களையும், அலுவலகத்தையும் புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

சுமார் 100 வருட வரலாற்றை கொண்ட இப் பாடசாலையானது காத்தான்குடியில் கல்விச் சேவையினை திறம்பட வழங்குகின்ற முன்னணி பாடசாலைகளில் ஒன்றாகும். மேலும் மிகவும் குறுகியதொரு நிலப்பரப்பிற்குள் அமைந்துள்ள இப் பாடசாலையில் சுமார் 700ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

70e831e9-418d-4b4c-a098-d699c1665ca8 ad1f718a-d0b5-43fc-bb71-7a903e33e0ec c8c2b56c-6b2c-4acd-b03d-43a14a886ac0 ccd59e00-c8a1-4c67-bc7f-959bbe208af6 d1524b7f-70cd-4863-968d-82635d1916c1 e4a091a1-f908-4d57-95f0-c0ae2f4c76a2

LEAVE A REPLY