காத்தான்குடி பாலியல் துஸ்பிரயோகம்: இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் மே 10வரை விளக்க மறியல்

0
120

(விசேட நிருபர்)  

jail630x350பெண்ணொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் கைதான இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் 10.5.2016 வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பெண்ணொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்தார்கள் எனும் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள் திங்கட்கிழமை இரவு (25.4.2016) காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிருவரையும் 26.4.2016 செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவர்களை 10.5.2016 வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டு;ளளார்.

இந்தப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் 19ம் வட்டாரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரை (24.4.2016) வீடு ஒன்றுக்கு பணியாளர் தேவையெனக் கூறி முச்சக்கர வண்டியொன்றில் காத்தான்குடி கர்பலா கிராமத்திலுள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று அந்தப் பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக குறித்த பெண் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளான 38 வயதுடைய குறித்த பெண் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்பு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடியைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் கொழும்பிலுள்ள பொலிஸ் நிலையமொன்றில் புலனாய்வுப்பிரிவில் கடமையாற்றுவதாகவும் மற்றயவர் மட்டக்களப்பிலுள்ள பொலிஸ் நிலையத்தில் புலனாய்வுப்பிரிவில் கடமையாற்றுவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY