சகவாழ்வின் கொண்டாட்டம் மட்டக்களப்பில்..

0
122

(விசேட நிருபர்)

நம்பிக்கையின் வாக்கு மூலம் எனும் தொனிப் பொருளில் சகவாழ்வின் கொண்டாட்டம் (23.4.2016) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

சிரகுநுணி பதிப்பகம் மற்றும் தயாரிப்பு இல்லம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த சகவாழ்வின் கொண்டாட்டம் நடைபெற்றது.

கடந்த காலத்தை நினைவு கூர்வோம் புதிய தொரு எதிர் காலத்தை நோக்கி நகர்வோம் என்ற அடிப்படையில் ஏழு தமிழ் முஸ்லிம் கலைஞர்கள் பங்கு பற்றிய இந்த சகவாழ்வின் கொண்டாட்டம் நிகழ்வில் சமாதானத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஓவியக் கதைக்கண்காட்சி மற்றும் பாடல்கள் நாடகம் என்பன நடைபெற்றன.

இதன் ஏற்பாட்டாளர் எம்.ஐ.எம்.ஜாபீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எழுத்தாளர்கள் கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த முப்பது வருடகாலம் இடம் பெற்ற கொடூர யுத்தத்தினால் சிதைந்து போன தமிழ் முஸ்லிம் இன உறவை இன்று ஏற்பட்டுள்ள சமானத்தைக் கொண்டு இவ்வாறான கலைகள் மூலம் இன உறவை கட்டியெழுப்ப இந்த சகவாழ்வின் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக இதன் ஏற்பாட்டாளர் எம்.ஐ.எம்.ஜாபீர் தெரிவித்தார்.

1b1c00b1-d7c7-417b-9b55-772400f3c45f 2c14f43e-a084-4fb3-921e-393ad459bb6a 7ac2a17b-627e-437c-810b-3183bb39a2de 83c92877-bb2a-4c25-8aea-5ec7265ce72c 92f6cabe-e59c-49ee-bfc1-43a299cf4924 8063de69-2eba-4745-a9ad-d3f5d2a84379 9806ee25-97d0-4d09-829a-662cf05631bf dcff2823-ac76-442c-abb5-3fe27d626f4f ecc3c662-d637-4de9-aa8d-bb6f32eff867

LEAVE A REPLY