ஶ்ரீலங்கன் விமான சேவை தனியாருடன் இணைந்து சேவையை நடாத்த அனுமதி

0
180

prime-minister-media-briefஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றும் பொருட்டு, மற்றுமொரு தனியார் நிறுவனத்துடன் இணைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்று (26) அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், தனியாருக்கு அல்லது தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைவதன் மூலம், தற்போது நஷ்டத்தில் இயங்கும் இலங்கை விமானசேவையை மீண்டும் இலபாமீட்டும் நிறுவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.

விமான சேவையை அரசுடைமையாக்க, சுமார் 3.25 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம் என பிரதமர் இதன்போது சுட்டிக் காட்டினார்.

ஏற்கனவே கடந்த 1998 இல், 10 வருட ஒப்பந்த அடிப்படையில், ஶ்ரீலங்கன் விமான சேவையின் 43.6 வீத பங்குகள் துபாயின் எமிரேற்ஸ் விமான சேவைக்கு விற்கப்பட்டு, கடந்த 2008 இல் அரசாங்கத்தினால் மீள வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY