லிங்கராஜா திடீர் விஜயம் மேற்கொண்டு கூட்டுதாபனத்திற்கு சொந்தமான 5000 ஏக்கர் காணி பார்வை

0
258

( ஜுனைட்.எம்.பஹ்த்)

7dc141e9-3648-484f-a754-47aae3683872மரமுந்திரிகை கூட்டுத்தாபன பணிப்பாளர் வே.கு.லிங்கராஜா திருகோணமலை கயூவர்த்தை எனும் இடத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

அங்கு மரமுந்திரிகை கூட்டுதாபனத்திற்கு சொந்தமான 5000 ஏக்கர் காணியை பார்வையிட்டார். மேலும் அவர் கூறுகையில் கடந்தகால யுத்தத்தினால் மரமுந்திரிகை பயிர்ச்செய்கைகள் அழிவடைந்த நிலையில் காணப்பட்டது.

இதை புணர்ஸ்சாதனம் செய்து மரமுந்திரிகை பயிர்ச்செய்கையை மீண்டும் ஆரம்பித்து மரமுந்திரிகை கூட்டுதாபனத்திற்கு வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என கூறினார்.

அவர் திருகோணமலை மரமுந்திரிகை கூட்டுதாபனத்திற்கு சொந்தமான காணியை பார்வையிட சென்ற போது மட்டக்களப்பு திருகோணமலை க்கு பொறுப்பாக உள்ள முகாமையாளர் டேவிட் நிதர்ஷன் அவர்களும் விஜயம் மேட்கொண்டிருந்தார்.

தொடர்ந்து முகமையாளர் கூறுகையில் கடந்த கால யுத்தம் காரணமாக கிழக்கு மாகாணத்தில்
மரமுந்திரிகை கூட்டுதாபனத்திற்கு மிக மோசமான சேதங்களும்,நஷ்டங்களும் ஏற்பட்டுள்ளது.என குறிப்பிட்டார்.

தொடர்ந்து மரமுந்திரிகை கூட்டுதாபன பணிப்பாளர் வே.கு.லிங்கராஜா கூறுகையில் தற்போது நாட்டில் சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இனிவரும் காலங்களில் மரமுந்திரிகையை கிழகு மாகாணத்தில் உள்ள மரமுந்திரிகை கூட்டுதாபனத்திற்கு சொந்தமான காணிகளிலும் ,தனியாருக்கு சொந்தமான காணிகளிளும் மரமுந்திரிகை பயிர் செய்கை விரிவுபடுத்த உள்ளோம்.

மரமுந்திரிகை பயிர் செய்ய விரும்பியோருக்கு மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் சில சலுகை செய்ய என்னியுள்ளதாகவும் அக் கூட்டுதாபனத்தின் பணிப்பாளர் வே.கு.லிங்கராஜா தெறிவித்தார்.

LEAVE A REPLY