மட்டக்களப்பு கல்வி வலயங்களில் ஆங்கிலக் கல்வியின் அடைவு மட்டத்தை அதிகரிப்பது பற்றி ஆராய்வு

1
232

(ஏ.எச்.ஏ. ஹு ஸைன்)

324e0e2e-54e8-4d82-99a2-e88eb09127b2மட்டக்களப்பு கல்வி வலயங்களில் ஆங்கிலக் கல்வியின் அடைவ மட்டத்தை அதிகரிக்கும் வகையில் ஆலோசனைகளைப் பெறுவதற்கான கருத்தரங்கொன்று செவ்வாய்க்கிழமை கிழக்குப் பல்கலைக் கழக கலைப்பீட மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றதாக கிழக்குப் பல்கலைக் கழக ஆங்கில் மொழித்துறைப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜி. கென்னடி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐந்து கல்வி வலயங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆங்கில மொழிப் போதனாசிரியர்கள் இந்த கருத்தரங்கில் பங்குபற்றினர்.

கிழக்குப் பல்கலைக் கழக ஆங்கில மொழித்துறைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஆங்கில் மொழித்துறைப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜி. கென்னடி, இணைப்பாளர் பி.எஸ். ஜெயராஜா, போதனாசிரியர்களான எஸ். சசிதரன், எஸ். கலைமதி ஆகியோர் கலந்து கொண்டு கருத்தரங்கை நெறிப்படுத்தினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதமாரண தரப் பரீட்சையில் ஆங்கில மொழியில் ஆகக் குறைந்த “எஸ்” தரச் சித்தி கூட 41 வீதமே கிடைத்துள்ளது.

ஆங்கில மொழிக்கான முக்கியத்துவம் கல்விக் கொள்கையில் குறைத்து மதிப்பிடப்பிடப்பட்டுள்ளதால் பெற்றோர், மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் மத்தியிலும் ஆங்கில மொழிக்கான முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடப்படுவதே ஆங்கில மொழித் தேர்ச்சியின் அடைவு மட்டம் பின்னடைவுக்கான காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

கல்விக் கொள்கை, ஆங்கில ஆசிரியர்கள் பற்றாக்குறை, தூரப்புறப் பாடசாலை மாணவர்களுக்கான ஆக்கபூர்வ செயற்பாடுகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமை, ஆசிரியர்களுக்குள்ள பல்வேறு வேலைப்பளுக்கள், சமூகக் கொள்கைகள் இதுபோன்ற இன்னும் பல காரணிகள் ஆங்கில மொழித் தேர்ச்சியைக் கூட்டுவதில் தடைக்கற்களாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.

1 COMMENT

  1. This is deplorable to say that our students are pathetic victims of poor English Knowledge.I analyzed hundreds of O.L results.Most of them got the highest result only in Tamil language and religions.English is a ?
    So I suggest that English must be made a compulsory subject in all schools in our country.My second suggestion is make Humanism also compulsory .Start teaching from year3 to Universities.A degree holder in Humanism will be well recognized in the society. Humanism is going to be new subject. Humanism has no race religions,caste egoism,Humanism is selfless.Based on love and compassion.If you are a Secular Humanist you are the Right Man.Secular Humanism is the Right Religion to follow.

LEAVE A REPLY