மட்டக்களப்பில் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

0
732

(எம்.ரி.எம்.யூனுஸ்)

DSC_1392மட்டக்களப்பு பொலீஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு 10 ஆம் குறுக்கில் வீடொன்றிலிருந்த நபர் ஒருவர் கத்திக் குத்துக் காயங்களுடன் மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதோடு மற்றொருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கத்திக்குத்து காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (25) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் வேலாயுதம் புஸ்பாகரன் எனும் 51 வயதான குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

குடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராரே கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

DSC_1444 DSC_1449

LEAVE A REPLY