வசீம் தாஜுதீனின் கொலையுடன் மஹிந்தவை தொடர்புபடுத்த சதி: உதய கம்மன்பில

0
205

ரக்பி வீரர் தாஜு­தீனின் மர­ணத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவைத் தொடர்­பு­ப­டுத்­து­ம் வகை­யி­லேயே விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

கைது­களும் நடை­பெ­று­கின்­றன. இதன் முதற்­கட்­ட­மா­கவே பொலிஸ் பரி­சோ­தகர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார் என பிவி­துறு ஹெல உறு­ம­யவின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.

பிட்­ட­கோட்­ட­யி­லுள்ள பிவி­துறு ஹெல உறு­மய கட்­சியின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நேற்­றுக்­காலை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊட­கவி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்தும் அவர் பதி­ல­ளிக்­கையில்;
புதிய பொலிஸ் மா அதிபர் பத­வி­யேற்­றதும் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் வஸீம் தாஜுதீன் மர­ணத்­துடன் சம்­பந்­தப்­பட்ட அனை­வரும் கைது செய்­யப்­ப­டு­வார்கள். விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள். நான் எவ்­வித பக்­கச்­சார்­பு­மின்றி அர­சியல் சாராது கட­மையைச் செய்வேன் என்று கூறி­யுள்ளார்.

தாஜுதீன் மரணம், எம்­பி­லி­பிட்­டிய கொலைச் சம்­பவம் என்­ப­ன­வற்றின் விசா­ர­ணை­களை குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரே முன்­னெ­டுத்­துள்­ளனர்.

சந்­தேக நபர்­க­ளாக பொலி­ஸாரே சம்­பந்­தப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்கும் இவ்­வ­ழக்­கு­களை பொலி­ஸாரே விசா­ரிக்­கின்­றனர்.

இதே­வேளை, எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் கிளி­நொச்சி மாவட்­டத்தில் உள்ள இரா­ணுவ முகா­மொன்­றுக்குள் அத்­து­மீறி செல்ல முற்­பட்­ட­தோடு இரா­ணுவ அதி­கா­ரி­களின் கட­மை­க­ளுக்கும் இடை­யூறு விளை­வித்­துள்ளார். இச்­சம்­பவம் தொடர்பில் இரா­ணுவ அதி­கா­ரி­க­ளினால் பொலிஸில் முறைப்­பாடு ஒன்று செய்­யப்­பட்டும் இது­வரை எது­வித நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

பொலிஸ் மா அதிபர் நடத்­திய ஊடக மாநாட்டில் தெரி­வித்த கருத்­துகள் உண்­மை­யானால் அவர் சம்­பந்­தனை கைது செய்து நிரூ­பிக்க வேண்டும். பொலிஸ் மா அதிபர் வீர­வ­சனம் பேசிக்­கொண்­டி­ருக்­காது தனது கட­மையைச் செய்து காட்ட வேண்டும்.

எதிர்க்­கட்சித் தலைவர்
தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­கரன் ஆயு­தங்­க­ளினால் பெற்­றுக்­கொள்ள முடி­யாது போன தமி­ழீ­ழத்தை அர­சியல் மூலம் பெற்­றுக்­கொள்­வ­தற்கு எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் முயற்­சிக்­கிறார். இதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது.

விக்­னேஸ்­வ­ர­னதும் சம்­பந்­த­னதும் நட­வ­டிக்­கைகள் நாட்டின் தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­துக்கும் குந்­தகம் விளை­விப்­ப­தா­கவே அமைந்­துள்­ளன.

வற்­வரி அதி­க­ரிப்பு
அர­சாங்கம் வற்­வ­ரியை அதி­க­ரித்து மக்கள் மீது சுமை­களைத் திணிக்க திட்­ட­மிட்­டி­ருக்­கையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன வற்வரி அதிகரிக்கப்படாது என்று பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மக்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.

மே முதலாம் திகதி நடைபெறவுள்ள மேதினக் கூட்டத்தில் இதனை ஜனாதிபதி மக்களுக்கு பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும். மே மாதம் முதலாம் திகதி ஜனாதிபதிக்கு பரிசோதனையான நாளாகும் என்றார்.

-Vidivelli-

LEAVE A REPLY