சொந்த மண்ணில் கிரிக்கட் விளையாட தடை

0
255

கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றங்களை செய்ய மறுத்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் சர்வதேச போட்டிகளை நடத்த அரசு தடை விதித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கருப்பர், வெள்ளையர் இன சர்ச்சை நீண்டகாலமாக உள்ளது. கறுப்பர் இனத்தவருக்கு அணியில் தடை விதித்ததால் 1970ல் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு தடைவிதித்தது.

பின்னர் இதில் மாற்றம் கொண்டு வரப்பட்ட நிலையில் 1991ல் தடை விலக்கிக் கொள்ளப்பட்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது கறுப்பினர் வீரர்களுக்கு 9 சதவீத இடம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இதை ஏற்றுக் கொள்ளாத ரக்பி, கிரிக்கெட், நெட்பால், தடகள சங்கங்ளுக்கு அரசு தடைவிதித்துள்ளது. இந்த நிர்வாகங்கள் சொந்த மண்ணில் தொடர்களை நடத்த அனுமதி கோரமுடியாது.

2023 வரை தொடர்களை நடத்த அரசு அனுமதி வழங்காது. இருப்பினும் அரசின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டால் அடுத்த வருடமே தடை நீக்கப்படும் என்று அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் பிக்கைல் மபலுலா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY