வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் கௌஷால்

0
214

பயிற்­சியின் போது தலையில் பந்து அடிப்­பட்ட நிலையில் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை கிரிக்கெட் வீரர் கௌஷால் சில்வா சிகிச்சைகள் நிறைவடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

இங்­கி­லாந்து சுற்றுப் பய­ணத்­திற்­காக, கண்டி பல்­லே­கலை மைதா­னத்தில் பயிற்­சியில் ஈடு­பட்­டி­ருந்­த­போதே, இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ரான கௌஷால் காய­ம­டைந்­தார்.

உட­ன­டி­யாக கண்டி மருத்­து­வ­ம­னையில் சேர்க்­கப்­பட்ட பின்னர், மேல­திக சிகிச்­சைக்­காக ஹெலி­கொப்டர் மூலம் அவர் கொழும்பு வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்­து­வ­ரப்­பட்டார்.

கௌஷால் சில்வா விக்­கெட்­டுக்கு அருகே களத்­த­டுப்பில் ஈடு­பட்­டி­ருந்­த­போது, தினேஷ் சந்­திமால் அடித்த பந்தே கௌஷாலின் தலையில் பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் அவரை பரி­சோ­தித்த வைத்­தி­யர்கள் அவ­ருக்கு ஆபத்து ஏது­மில்­லை­யென்று தெரி­வித்­தனர்.

ஆனாலும் கௌஷால் சில்வா இங்­கி­லாந்து தொடரில் கலந்­து­கொள்­வாரா இல்­லையா என்பது இன்னும் சில நாட்களில் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­க இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் வைத்­தியர் குழு தெரி­வித்­துள்­ளது.

இங்­கி­லாந்து சுற்றுப் பய­ணத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி போட்டியில் கௌஷால் சில்வா சதம் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY