தேசிய அருங்காட்சியகம் கட்டிடத்தில் தீ விபத்து

0
197

இந்தியாவின் டெல்லியில் உள்ள கனாட் பேலஸ் என்ற இடத்தில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் கட்டிடம் உள்ளது. இது 6 மாடி கொண்டதாகும்.

இந்த கட்டிடத்தில் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் செயல்பட்டு வந்தது. 6–வது மாடியில் கருத்தரங்க கூடம் இருந்தது. இங்கு புனரமைப்பு பணிகள் நடந்து வந்தன.

இந்த நிலையில் இன்று அதிகாலை கருத்தரங்க கூடத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ கட்டிடம் முழுவரும் பரவியது. டெல்லியில் இருந்து 35–க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுப்படுத்தப்பட்டது.

ஆனால் கட்டிடத்தில் இருந்த ஏராளமான மிக முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது. தீயை அணைக்க முயன்ற 6 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY