வெயிலுக்கு உகந்த வெள்ளரிக்காய் தக்காளி சாலட்

0
186

தேவையான பொருட்கள் :

வெள்ளரிக்காய் – 1
தக்காளி – 1
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
புதினா – சிறிது (நறுக்கியது)
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* முதலில் எலுமிச்சை சாற்றில் புதினா, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியை சமஅளவில் நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* நறுக்கிய வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியை ஒரு பௌலில் போட்டு, அதன் மேல் எலுமிச்சை சாறு கலவை மற்றும் ஆலிவ் ஆயிலை தெளித்து, பரிமாறினால், சூப்பரான வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சாலட் ரெடி!!!

LEAVE A REPLY