மூதூர் பிரதேச செயலகத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வு

0
209

(றிசாத் ஏ காதர்)

மூதூர் பிரதேச செயலகத்திற்க்கு 03 கோடி 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய கட்டிட நிர்மானத்திற்கான ஆரம்ப கட்ட நிகழ்வு மூதூர் பிரதேச செயலாளர் ஏ.யூசுப் தலைமையில் நேற்று 25.4.2016 செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் N.யு.யு.புஸ்பகுமார, விசேட விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் மஹ்றூப், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான அல்ஹாஜ் ஜே.எம்.லாகீர் மற்றும் பல முக்கியஸ்த்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

LEAVE A REPLY