பொதுமக்களின் நன்மைகருதி காத்தான்குடி கடற்கரை வீதிக்கு தற்காலிக தீர்வு

0
169

(எம்.ரீ. ஹைதர் அலி)

காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள இரு பாலங்களினதும் ஓரப்பகுதிகள் மிக மோசமாக சேதமடைந்து காணப்படுவதால் தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்படுவது மட்டுமன்றி மக்கள் பல்வேறு சிரமங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

இது விடயமாக கவனம் செலுத்திய மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் நேற்று (25) திங்கட்கிழமை குறித்து இடத்திற்கு நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டதோடு, காத்தான்குடி நகரசபையின் செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களையும் நேரில் வரவழைத்து நிலைமையினை சுட்டிக்காட்டி இவ்வீதியால் பயணம் செய்யும் பொதுமக்களின் நன்மைகருதி விரைவாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார்.

இவ்வீதியினை செப்பனிடுவதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இவ்வீதியினை செப்பனிடப்படும் வரையிலான காலப்பகுதிக்குள் தற்காலிகமாக எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் குறித்த சில பள்ளங்களை மூடி விடுவதற்கும் பாலங்களுக்கு அண்மையிலுள்ள சரிவான பகுதிகளில் எச்சரிக்கை பதாதைகளை இடுவதற்குமான நடவடிக்கைகள் காத்தான்குடி நகர சபையினால் மேற்கொள்ளுமாறு காத்தான்குடி நகர சபையின் செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு பணிப்பரை விடுத்தார்.

13043740_1176640149054399_3268498178622165586_n 13062231_1176640255721055_4053529259709838514_n 13083120_1176640115721069_7710462403110330857_n 13100963_1176640212387726_4891512858043774841_n

LEAVE A REPLY