கௌஷால் சில்வாவின் உடல் நிலையில் முன்னேற்றம்

0
177

பயிற்சிப் போட்டியொன்றின் போது உபாதைக்குள்ளான இலங்கை கிரிக்கட் அணி வீரர் ங ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன வைத்தியக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.

வைத்திய அறிக்கையின் அடிப்படையில் கௌஷால் சில்வாவுக்கு இந்த வார இறுதி முதல் மீண்டும் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டீ சில்வா ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

கௌஷால் சில்வாவின் உடல்நிலை குறித்த அறிக்கையொன்றை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பும் உள்ளதாக மொஹான் டீ சில்வா நம்பிக்கை வௌியிட்டார்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை முன்னிட்டு பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியொன்றின் போது தினேஷ் சந்திமால் துடுப்பெடுத்தாடிய சந்தர்ப்பத்தில் ஷோர்ட் லெக் திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது தலையில் பந்து பட்டதால் கௌஷால் சில்வா உபாதைக்குள்ளாகிய நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY