காத்தான்குடி சிறுமி விவகாரம்: சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல் நீடிப்பு

0
193

(ஜுனைட்.எம்.பஹ்த்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி 05 யில் 10 வயது யுஸ்ரி எனும் சிறுமிக்கு நெருப்பினால் சூடு வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த சிறுமியின் தந்தை மஜீத் (றப்பாணி).மற்றும் வளர்ப்புத் தாய் மும்தாஜ் ஆகியோர்களது வழக்கு இன்று 25.04.2016 திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேற்படி இருவருக்கும் மே மாதம் 02 ம்
திகதி வரை 07 நாட்கள் விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி 10 வயது சிறுமி யுஸ்ரி அவரது வளரப்புத் தாயினால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி சந்தேகத்தின் பெயரில் காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டத தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY