கல்முனை அல் – மிஸ்பாவில் 63 சதவீதமானோர் உயர்தரத்துக்குத் தெரிவு

0
132

எம்.எஸ்.எம்.சாஹிர்)

அண்மையில் நடை பெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் கல்முனை அல் – மிஸ்பா மகாவித்தியாலயத்தில் ஜே.எப். இபானா பர்வின் 9 பாடங்களிலும் (ஏ) அதி விசேட சித்தி பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் எமக்குத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எம்.எஸ்.எஸ். நதா, எம்.என்.எப்.ஷேபா, எம்.எம்.எப். அஸ்ரா, ஆர்.எப்.ரீஸா ஆகிய மாணவிகள் 8 (ஏ) சித்தியும் ஏ.இஸ்ரத் அப்ரா 7 (ஏ) சித்தியும் ஏ.ஜி.எம். இம்ரான் ஏ.டபிள்யு.எப்.எப். நஷா, எம்.ஜே.எப். ஹனா, ஆகிய மாணவ மாணவிகள் 6 (ஏ) சித்தியும் ஏ.எம்.எப். றிஸானா 5 (ஏ) சித்தியும் பெற்றதுடன் 63 சதவீதத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் பாடசாலையிலிருந்து உயர்தரப் பிரிவுக்கு கல்வி கற்கத் தகுதி பெற்றுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY