உலகின் நான்காவது மிக நீளமான தொங்கு பாலம் துருக்கியில்….

0
253

உலகின் மிகப் பொரும் தொங்கு பாலங்களில் ஒன்றான உஸ்மான் காஸி தொங்குபாலத்தின் இறுதிப் பகுதியை இணைக்கும் நிகழ்வில் துருக்கிய ஜனாதிபதி ரஜப் தைய்யிப் அர்துகான், பிரதமர் தாவூத் ஒக்லூ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Izmit_bay_bridge_april_2016துருக்கியின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் கோஜா இலி, யாலுபாஃ எனும் இரு மாநிலங்களை இத்தொங்கு பாலம் இணைக்கிறது.

துருக்கி ஸ்தாபிக்கப்பட்ட நூற்றாண்டு நிகழ்வை 2023 இல் அது கொண்டாடுகிறது. அதனை முன்னிட்டு துருக்கியில் மேற்கொள்ளப்படும பாரிய அபிவிருத்தி திட்டங்ளை துருக்கி மேற்கொண்டு வருகிறது. ஸ்தான்பூல், பூர்ஸா மற்றும் ஸ்மீர் மாகாணங்களை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை சங்கிலியில் முக்கியமான ஒன்றாக இப்பாலம் அமைகிறது.

இத்திட்டத்திற்கு 9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படுகிறது. இத்திட்டம் 2018 இல் திறந்து வைக்கப்படவுள்ளது. இப்பாலமானது ஒன்றரை மணித்தியால தூரத்தை ஆறு நிமிடங்களாக சுருக்கியுள்ளதாக துருக்கிய ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

உலகின் நான்காவது மிக நீளமான பாலமாக கருதப்படும் இப்பாலத்தினால் இரு மாகாணங்களுக்கு மத்தியிலான 8 மணித்தியால தூரம் மூன்று மணித்தியாலங்களாக குறைவடைவதாக துருக்கியப் பிரதமர் தாவூத் ஒக்லுா தெரிவித்துள்ளார். துருக்கியில் இடம்பெறும் அபிவிருத்தியை பயங்கரவாதிகளால் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.n_98178_1

இத்தொங்குபாலத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ள நிதி 50 சிறிய நாடுகளின் தேசிய வருமானத்தை விட அதிகமாகும் என தெரவித்துள்ள துருக்கி போக்குவரத்து அமைச்சர் இது துருக்கியின் பலத்தை வெளிப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

உஸ்மான் காஸி தொங்கு பாலம் 2682 மீற்றர் நீளம் கொண்டதுடன் நான்கு மாகாணங்களை இணைக்கும் 433 கிலோமீற்றர் நீளமான அதிவேக நெடுஞ்சாலையின் மிக முக்கிய இடத்தில் அமைகிறது.

LEAVE A REPLY