உலக மலேரியா தினம் இன்று!

0
117

மலேரியாவினால் ஏற்படும் பாதிப்பை விளக்கவும் மலேரியா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் உலகம் முழுவதும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியாகிய இன்று ‘உலக மலேரியா தினமாக’ அனைத்து நாடுகளினாலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதற்கமைய ஐ.நா அமைப்பானது ஒவ்வொரு ஆண்டும் இதற்கென பல வகையான தொனிப்பொருள்களை முன்னிறுத்தி அது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அவ்வகையில் இவ்வாண்டுக்காக “நல்ல பெறுபேற்றினைப் பெறுவதற்காக மலேரியாவினை முற்றாக இல்லாதொழிப்போம்” (“End Malaria For Good”) என்ற தொனிப் பொருளின் கீழ் இவ்வாண்டுக்கான மலேரியா தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அவ்வகையில் இலங்கையானது மலேரியா முற்றாக இல்லாத நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், போஷாக்கு மற்றும் உள்நாட்டு மருத்துவ அமைச்சு மேற்கொண்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் பயனாக நாட்டினுள் மலேரியா பரவுதல் முழுமையாகக் கட்டுப்பாட்டு நிலைக்கு வந்துள்ளது.

அமைச்சு மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளின் பயனாக 2012 ஆம் ஆண்டின் பின்னர் இந்நாட்டினுள் எவரும் மலேரியா நோய்க்கு உள்ளாகவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆயினும் எம்மைச் சூழவுள்ள நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் மலேரியாத் தொற்றுக்கு உள்ளாகி நாடு திரும்புபவர்கள் அவ்வப்போது இனம் காணப்படுவதாகவும், அவர்களில் வெளிநாடுகளுக்கு சென்று நாடு திரும்பும் இலங்கையரும், இந்நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டவரும் அடங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணத்தினால் மலேரியாவுக்கு உள்ளானவர்களாக எவராவது இனம் காணப்பட்டால் உடனடியாக மலேரியத் தடுப்பு இயக்கத்திற்கு அறியத் தருமாறு நாடெங்கிலுமுள்ள அரசாங்க மற்றும் தனியார் வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY