108 ஆண்டுக்கு பிறகு வேலூரில் 111 டிகிரி வெப்பம்..!

0
157

தமிழகத்தின் வேலூரில் முதன்முறையாக கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே 110.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

அக்னி நட்சத்திர காலத்தில் வேலூரில் 110 டிகிரி வெப்பம் பதிவாகும். முதன் முறையாக அக்னிக்கு முன்பே ஏப்ரல் மாதத்திலேயே 110.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இது 108 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத பதிவாகும்.

இவ்வருடம் பெப்ரவரி மாதம் முதலே வெப்பம் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதுடன் மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

ஒவ்வொரு நாளும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் அனல் காற்றில் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னரே இப்படி வெய்யில் ருத்ர தாண்டவம் ஆடுவதால் அக்னி நட்சத்திர காலத்தில் என்ன செய்ய போகிறோமோ என்று பொதுமக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

LEAVE A REPLY