இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கு ஒரு அலகு என்பது வெட்டிப்பேச்சு: பிரதியமைச்சர் அமீரலி கேள்வி

0
191

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கு ஒரு அலகு என வாய் கிழியப் பேசுவது ஒரு வெட்டிப்பேச்சு.

தமிழ்க் கிராமங்களுக்குள் இருக்கும் ஊர் வேறுபாடடுப் பிரச்சனையைத் தீர்துக் கொள்ள முடியவில்லை. இது இவ்வாறெனின் எப்படி வடக்கையும், கிழக்கையும், இணைக்கப் போகின்றீர்கள்.

பட்டிருப்பு கிராம மக்களும், களுவாஞ்சிகுடி கிராம மக்களும் ஒன்றுபட்டு செயற்பட முடியாதென்றால் எதிர்காலத்தில் வடக்கையும், கிழக்கையும் எவ்வாறு இணைக்கப் போகின்றீர்கள். எவ்வாறு தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் இதனைப் பெற்றுத்தரப் போகின்றார்கள். வெறுமனே அவர்கள் பூச்சாண்டி காட்டுகின்றார்களா, அல்லது நீங்கள் எல்லோரும் சேர்ந்து பூச்சாண்டி காட்டுகின்றீர்களா என்பதுபற்றித் தெரியாதுள்ளது. என கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கருவாஞ்சிகுடி பிரதான வீதியில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட பேரூந்து தரிப்பு நிலையம் ஞாயிற்றுக்கிழமை பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி, மற்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளரும், வர்த்தக வாணிபத்தறை அமைச்சின் ஆலோசகருமான சோ. கணேசமூர்த்தி ஆகியோரால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கடந்த காலங்களில் தமிழ் மக்கள் விடுதலைக்காக பதாகைகளை ஏந்தினார்கள், எமது உறவுகளைக் காணவிவல்லை என சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தினார்கள், நிலங்கள் பறிபோகின்றன என்பதற்காக சுலோகங்களை ஏந்தினார்கள், தற்போது ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இருவர், எல்;லைகள் கேட்டு பதாகைகளை ஏந்தும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுள்ளார்கள். இவற்றை தயவு கூர்ந்து சிந்தித்துச் செயற்படுங்கள்.

நான் யாருக்கும் பயப்படாத குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவுக்குக்கூட பயப்படாத ஒரு நேர்மையான அரசியல்வாதி. ஆனால் மனித நேயம் தோற்றுப் போகக்கூடாது கிராமங்கள் பிளவு பட்டுவிடக் கூடாது என்பதில் கரிசனையாகவுள்ளேன்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதி மக்கள் செய்த அநியாயத்தின் காரணமாக இந்த தொகுதி மக்கள் ஒரு கபினட் அந்தஸ்த்தை உடைய அமைச்சரை இழந்து நிற்கின்றது.

அரசியல் என்பது எந்தக் கட்சியிலும் செய்ய முடியும், நாயும் கறிச் சட்டியுமாக இருந்த மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்ஹவும், தற்போது ஒரு மேடையிலே அர்ந்து பிரச்சனைகளுக்கு பேசித் தீர்வு காண்கின்றார்கள்.

இவ்வாறு இரண்டு பெரும்பான்மை சிங்கள கட்சிகளும் ஒன்று சேர்ந்திருக்கின்ற இக்காலகட்டத்தில், சிறுபான்மை இனங்களாகிய நாங்கள் மிகவும் விழிப்பாகச் செயற்பட வேண்டியிருக்கின்றது.

எனவே இக்கால கட்டத்தில் தமிழர் என்றோ, முஸ்லிம்கள் என்றோ பிரிவினைகளைப் பற்றிப் பேசாமல் எமது பிரசேங்களின் அபிவிருத்திகள் பற்றி சிந்தித்துச் செயற்பட வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY