தீர்வு முன்மொழிவுகள் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை NFGG கேட்டறிந்தது

0
138

(NFGG ஊடகப்பிரிவு)

காத்தான்குடி பிரதான வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பில் NFGGயினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு முன்மொழிவுகள் தொடர்பாக காத்தான்குடி பிரதேச பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் விஷேட சந்திப்பொன்று கடந்த 22.04.16 அன்று இடம்பெற்றது.

NFGGயின் காத்தான்குடி பிராந்தியக் காரியாலயத்தில் இட ம்பெற்ற இச்சந்திப்பின் போது NFGGயினால் முன்வைக்கப்பட்ட தீர்வு முன் மொழிவுகள் தொடர்பில் அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் விளக்கங்களை வழங்கியதோடு, பொது மக்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

காத்தான்குடி பிரதான வீதியில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றிய திட்ட முன்மொழிவுகளை NFGG a கடந்த 22.04.16 அன்று பொது மக்களின் பார்வைக்காக பகிரங்கமாக சமர்ப்பித்திருந்தது.

அத்துடன் இம்முன் மொழிவுகள் தொடர்பில் பிரதான வீதி வர்த்தகர்களினதும் ஏனைய பொது மக்களினதும் கருத்துக்களை கேட்டறியும் விஷேட சந்திப்பொன்றிற்கான பகிரங்க அழைப்பையும் NFGG விடுத்திருந்தது. இதற்கமைவாகவே இக்கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சந்திப்பின்போது கருத்து தெரிவித்த பொது மக்கள் இத்திட்ட முன் மொழிவுகளில் உள்வாங்கப்பட வேண்டிய மேலும் சில ஆலோசனைகளை முன்வைத்தனர். இவற்றை அங்கீகரித்து ஏற்றுக்கொண்ட பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவற்றையும் உள்ளடக்கியதாக இந்த திட்ட முன் மொழிவுகள் தயாரிக்கப்பட்டு உரிய இடங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்ததோடு இவற்றை மிக விரைவில் அமுல்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

IMG-20160424-WA0027 IMG-20160424-WA0029 IMG-20160424-WA0032

LEAVE A REPLY