செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணைய தளங்கள் வழி ஏற்படுத்தி கொடுக்கிறது: ஹிஸ்புல்லாஹ்

0
278

(எம்.ரி.எம்.யூனுஸ்)

இம்போட் மிரர் ஊடக வலையமைப்பின் ஆறாவது அகவையை முன்னிட்டு காத்தான்குடி சம்மேளன அஷ்-ஷஹீட் அஹமட் லெப்பை ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை ஊடக செயலமர்வு இடம்பெற்றது.

இம்போட் மிரர் ஊடக வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முனாஸ் தலைமையில் இடம்பெற்ற முதலாவது அமர்வுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் பிரதம அதீதியாகவும் மற்றும் பல சமூக பிரமுகர்கள் கெளரவ அதீதிகளாகவும் கலந்து கொண்டனர்.

பிரதம அதீதி உரையாற்றுகையில்,

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் சழூக வலைத்தளங்களே பெரிதும் பங்காற்றியது எனவும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணைய தளங்கள் வழி ஏற்படுத்தி கொடுக்கிறது எனவும் தெரிவித்தார்.

இங்கு இம்போட் மிரர் ஊடக வலையமைப்பிற்கான டீ-சேட் அறிமுகம் இடம் பெற்றதோடு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நினைவுச் சின்னமும் இம்போட் மிரர் ஊடகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முனாஸினால் வழங்கி வைக்கப்பட்டது.

செயலமர்வில் ஊடகம் தொடர்பான பயிற்சியும் அறிவிப்பாளர்களுக்கான பயிற்சியும் புலமைவாய்ந்த வளவாளர்களால் நடாத்தப்பட்டது.

இரண்டாம் கட்ட அமர்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாரூக், ஆரிப் சம்சுதீன் மற்றும் பிரதேச, நகர, மாநகர சபை உறுப்பினர்கள், கல்வியலாளர்கள், பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு ஊடக செயலமர்வில் பங்கு பற்றியோருக்கான சான்றிதழ் மற்றும் டீ-சேட்டுகளை வழங்கி வைக்கப்பட்டது.

IMG_20160424_104336-1024x575 IMG_20160424_104432-1024x575 IMG_20160424_104454-1024x575 IMG_20160424_104712-1024x575 IMG_20160424_161847-1024x575 IMG_20160424_163307-1024x575 IMG_20160424_174330-1024x575

LEAVE A REPLY