போதை பொருள் விற்பனை: வாழைச்சேனை ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

0
179

வாழைச்சேனை பிரதேசத்தில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருந்ததாக கூறப்படும் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், பொலிஸ் குழுவினர் சந்தேகநபரை கைதுசெய்துள்ளதுடன் அவர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ஒன்பது வகையான மாத்திரைகளும் கஞ்சா சிறிய கட்டு ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர் என்றும் இவர் யுத்த காலத்தில் காயமடைந்து கடமை செய்ய முடியாது என்ற மருத்துவ அறிக்கையின் பிரகாரம் சம்பளம் பெற்று வரும் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் தெரியவந்துள்ளது.

இவருடன் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் இன்னும் பலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY