கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளை மீள ஆரம்பம்

0
30

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் நாளை (25) மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள் இன்று (24) மாலை 6 மணிக்கு முன்னர் தங்களின் விடுதிக்கு சமூகமளிக்க வேண்டும் என திருகோணமலை வளாக முதல்வர் வல்லிபுரம் கனகசிங்கம் கூறியுள்ளார்.

இதேவேளை, திருகோணமலை வளாகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான ஒழுக்காற்று குழுவின் விசாரணைகள், குழுவின் குற்றப்பத்திரிகை தொடர்பில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் பதில் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் பதில் அறிக்கை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கான புதிய குழுவொன்று நாளை நியமிக்கப்படவுள்ளதாகவும் திருகோணமலை வளாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை வளாகத்தில் முகாமைத்துவ பிரிவு மாணவர்களுக்கும் சித்த மருத்துவ துறை மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து கடந்த மார்ச் 14 ஆம் திகதி தொடக்கம் மீள்அறிவித்தல் வரை கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-NF-

LEAVE A REPLY