தாஜுதீன் கொலை விவகாரம்: கூட்டு எதிரணியிடம் விசாரணை நடத்துக

0
177

முஜிபுர் ரஹ்மான் எம்.பி. புலனாய்வு பிரிவினரிடம் கோரிக்கை

பிரபல ரக்கர் வீரர் வசீம் தாஜுதீனின் கொலை விவகாரம் குறித்து தற்போது பொலிஸ் அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், நான் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது ஆவேசமடைந்து என்னை தாக்க முற்பட்ட கூட்டு எதிரணியினரிடம் புலனாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மஹிந்த அரசாங்கம் வசீம் தாஜுதீனின் கொலையை மூடி மறைத்தது. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த படுகொலை தொடர்பான விசாரணைகளை புதிய அரசாங்கம் முன்னெடுத்தது. எனினும் கடந்த வரம் வரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.

இது குறித்து நான் பாராளுமன்றத்தில் எடுத்துறைத்தபோது என்னை தாக்கமுற்பட்டனர். எனக்கு அச்சுறுத்தல் விடுத்தனர்.

எனக்கான அச்சுறுத்தலுக்கும் முன்னை அரசாங்கத்தின் மூடி மறைப்பிற்கும் காரணம் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்.

வசீம் தாஜுதீனின் கொலையுடன் மஹிந்த அரசாங்கம் செயற்பட்டிருக்கிறது. அதனை மூடி மறைப்பதற்காகவே இவ்விசாரனைகள் முடக்கப்பட்டிருந்தது.

பொலிஸ் திணைக்களம் இவ்விவகாரம் குறித்து கரிசனை காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்தபோது மஹிந்த ஆதரவு அணியினரான பொது எதிரணியினர் என்னை தாக்க முற்பட்டனர். அவர்கள் இவ்விடயம் குறித்து அதீத ஆவேசம் அடைந்ததன் காரணம் அவர்களின் குற்றம் அம்பமாகும் என்கிற பயத்தின் வெ ளிப்பாடே. எனவே என்னை தாக்க முற்பட்ட ஜோன்ஸ்டன் எம்.பி. போன்றவர்களிடம் தற்போது விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளும் கைதாகலாம். அவர்களுக்கு கட்டளையிட்ட அதிகார தரப்பினரும் கைதாகலாம். எனவே பொலிஸ் பிரிவினர் சட்டம் ஒழுங்குகளை நீதியான முறையில் அமுல்படுத்தி கொலையாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY