வக்கார் யூனிஸின் அணுகுமுறையால் பாகிஸ்தான் கிரிக்கெட் சீர்குலைந்தது: அப்துல் ரசாக்

0
189

சமீபத்தில் பயிற்சியாளர் பதவியைத் துறந்த வக்கார் யூனிஸின் அணுகுமுறை காரணமாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் சீர்குலைந்தது என மூத்த வீரரான அப்துல் ரசாக் குற்றம்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர் தோல்வியால் துவண்டு போயுள்ளது. டி20 உலகக் கோப்பையில் படுதோல்வி கண்டதன் எதிரொலியாக பயிற்சியாளர், தேர்வுக்குழு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டன.

இந்த நிலையில் அப்துல் ரசாக் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் கிரிக்கெட் சீர்குலைந்ததற்கு வக்கார் யூனிஸின் அணுகுமுறைதான் காரணம். அவர் மூத்த வீரர்கள் அணியில் இடம்பெறுவதை விரும்பியதில்லை. அவர்களை மதித்ததும் இல்லை. அவர் எல்லா வீரர்களையும் சமமாகவும், நியாயமாகவும் நடத்தவில்லை என்பதற்கு நானே சாட்சி. அதனால்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அவர் வீரர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தினார். நாட்டுக்காக சிறப்பாக விளையாடுவதற்கு தேவையான நம்பிக்கையை வீரர்களுக்கு அளிக்கவில்லை என்றார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்த சில முடிவுகளையும், மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான் ஆகியோரை ஆலோசகர்களாக நியமித்ததையும் கடுமையாக விமர்சித்த ரசாக், “சில வீரர்கள் அணியில் ஏதாவது ஒரு பதவியை வகிப்பதில் ஆர்வம் காட்டினர்.

ஆனால் எத்தனை பேர் அடிப்படையான பயிற்சிகளை அளிப்பதிலும், பாகிஸ்தான் கிரிக்கெட்டை காப்பாற்றுவதிலும் ஆர்வம் காட்டினார்கள்?’ என கேள்வியெழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY