இந்தியாவின் கிரிக்கட் வீரருக்கு புற்றுநோய் பாதிப்பு

0
234

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான அருண் லால் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மிகவும் அரிதான மற்றும் அபாயகரமான தாடை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர், தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “அபாயகரமான இந்த தாடை புற்றுநோய் என்னை தாக்கியிருப்பது கடந்த ஜனவரியில் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து 14 மணி நேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தாடை மாற்றப்பட்டது’ என்றார்.

அருண் லால் 16 டெஸ்ட், 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஓய்வுக்குப் பிறகு வர்ணனையாளராக செயல்பட்டு வந்த அருண் லால், புற்று நோய் காரணமாக தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வர்ணனையாளர் பணியைத் தொடங்கவுள்ளார்.

LEAVE A REPLY