உயர்தர பரீட்சையை ஏப்ரலில் நடத்த திட்டம்: உயர் கல்வி ராஜாங்க அமைச்சர்

0
120

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சையை ஏப்ரல் மாதத்தில் நடத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுவருவதாக உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் மொஹான் லால் க்ரேரு தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சையின் பின்னர், பல்லைகழக பிரவேசத்திற்காக காத்திருக்கும் காலத்தை குறைக்கும் நோக்கிலே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த யோசனைக்கு கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் என்பவற்றின் அனுமதி கிடைக்க பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY